அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு.. மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பலமுறை சம்மன் அனுப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்ட செய்தி சமீபத்தில் வந்த நிலையில் தற்போது அவர் மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது
இந்த வழக்கின் விசாரணைக்காக மார்ச் 21ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது அமலாக்கத்துறை அவருக்கு அனுப்பிய ஒன்பதாவது சம்மன் என்றும் கூறப்படுகிறது
இந்த சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராவாரா? அல்லது வழக்கம் போல் ஆஜர் ஆவதை தவிர்ப்பாரா என்பதை வரும் நாட்களில் நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Edited by Siva