1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (15:05 IST)

சிஏஏ சட்டத்தால் அசாம் மாநிலத்திற்கு பெரும் ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால்

kejriwal
சிஏஏ சட்டம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அசாம் மாநிலத்திற்கு பெரும் ஆபத்து என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசு சமீபத்தில் சிஏஏ என்ற குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்தார் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நாட்டுக்கு மிகவும் ஆபத்து என்றும் குறிப்பாக அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் அசாமில் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளது என்றும் தற்போது பாஜக இந்த சட்ட விரோதமாக குடியேறுவதற்கு குடியுரிமை வழங்க விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva