முதலமைச்சரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. பெரும் பரபரப்பு..!
தெலுங்கானா முதலமைச்சரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அமித் அரோரா என்பவருடன் நடத்தப்பட்ட விசாரணையில் கவிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் இதனை அடுத்து அவரை விசாரணை செய்ய சமன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்ச் 9ஆம் தேதி அதாவது நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கவிதாவுக்கு அமலாக்கத்துறை அம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் நாளை அவர் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா முதல்வரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ள தகவல் தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran