வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (11:33 IST)

நண்பனை கொன்று இதயத்தை எடுத்து காதலிக்கு செல்ஃபி! – தெலுங்கானாவை உலுக்கிய சம்பவம்!

தெலுங்கானாவில் காதலியிடம் பேசிய நண்பனை காதலன் வெட்டிக் கொன்று இதயத்தை எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர் ஹரிஹர கிருஷ்ணா. இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ள நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக நவீன் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் நவீனை காதலித்துள்ளார். இருவருமே காதலித்து வந்த நிலையில் பின்னர் கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்துள்ளனர். இருவரும் பிரிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் அந்த பெண்ணுக்கும், ஹரிஹர கிருஷ்ணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரகிருஷ்ணா தனது காதலை சொல்ல அதை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டுள்ளார்.


இவ்வாறாக இருவரும் காதலித்து வந்த நிலையில் நவீன் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கியுள்ளார். அடிக்கடி நவீன் தனக்கு தொல்லை கொடுப்பதாக அந்த பெண் ஹரிஹர கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணா தனது நண்பனான நவீனை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி மது அருந்தலாம் என கூறி நவீனை பேடா அமெர்பெட் பகுதியில் உள்ள ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் கிருஷ்ணா. இருவரும் மது அருந்திய நிலையில் இருவருக்கும் காதலி குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணா தான் கொண்டு வந்த கத்தியால் நவீனை குத்திக் கொன்றுள்ளார்.

குத்தி கொன்றதோடு மட்டுமல்லாமல் நவீனின் தலையை துண்டாக்கி, நெஞ்சை பிளந்து இதயத்தை வெளியே எடுத்து, ஆணுறுப்பையும் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அதை போட்டோ எடுத்து தனது காதலிக்கும் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆன நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் நேற்று போலீஸில் சரண் அடைந்துள்ளார். கொலை செய்யப்பட்ட நவீனின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K