திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (13:59 IST)

திருமண நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த நபர்...பரவலாகும் வீடியோ

hydrabath
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்த ஹல்டி விழவில் பங்கேற்ற 40 வயது நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காலாபட்டர் என்ற பகுதியில், நடந்த ஒரு திருமணத்தில், மணமக்களுக்கு மஞ்சல் பூசும் விழா நடைபெற்றது.

அப்போது, திருமணச் சடங்கிற்கு வந்த உறவினர்கள் அனைவரும், இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு மஞ்சல் பூசினர்.

இதில்,40 வயதுள்ள ஒரு நபரும் கலந்துகொண்டு, மணமகனுக்கு மஞ்சல் பூசினார்.

அவர், மணமகனுக்கு மஞ்சல் பூசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.

உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்தனர், அவர் எழாததால், உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கலள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளர்.
இதைக்கேட்டு, உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உயிரிழந்த நபர், ரப்பானி, குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணன் நிகழ்ச்சியில் ரப்பானி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.