வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (16:05 IST)

’’வயது மீறிய காதல்’’...பள்ளி ஆசிரியையுடன் காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவன்

Love
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி ஆசிரியையுடன், 10 ஆம் வகுப்பு மாணவர் இருவரும் ஒரேநாளில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில், கச்சிபவுலி நகரில் உள்ள சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 26 வயது ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அந்த ஆசிரியையும், அதே பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவனையும் ஒரே நாளில் காணவில்லை என்று இருவரின் வீட்டாரும் போலீஸில் புகாரளித்துள்ளனர்.

எனவே, இருவரும் கடத்தப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், புகார் கொடுத்த 2 நாட்கள் கழித்து, தாத்தா தன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். அதேபோல், அந்த மாணவனின் வீட்டாரும் புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

அந்த ஆசிரியையும், மாணவரும் காதலித்து வந்ததால், வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இருவரையும் அழைத்துப் போலீஸார் ஆலோசனை கூறினர்.

பின்னர், ஆசிரியைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியரும் மாணவரும், காதல் வசப்பட்டு, வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.