தொடர்புடைய செய்திகள்
- எல்லாம் ஓடிடிக்கு போயிடும் போல; தியேட்டர் திறப்பு எப்போ? – அமைச்சர் விளக்கம்!
- ரூல்ஸாவது.. கோர்ட்டாவது..! – தடையை மீறும் இந்து முன்னணி, பாஜக!
- நடிகையை திருமணம் செய்துகொண்ட இளம் இயக்குனர் – இணையத்தில் பரவிய புகைப்படம்!
- ஐபிஎல் 2020… முதல் போட்டியிலேயே ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்கள் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- இது இந்தி நாடு இல்ல; இந்திய நாடு! – குரல் கொடுத்த மய்யம்!
ரத்தாகிறது இ-பாஸ்: பயணங்களுக்கு கட்டுபாடு இல்லை என உள்துறை நோட்டிஸ்!
மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என உள்துறை செயலர் கடிதம்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் வாங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் மக்கள் மற்றும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டிய நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் இனி அந்த நடைமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களை இ-பாஸ் முறை இருந்தால் தானே கண்டறிய முடியும். இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கு எல்லாம் இருக்கிறது என கண்டறிய முடிகிறது. இ-பாஸ் முறையால் தான் கொரோனா பரவல் இந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஆனால் தற்போது மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
