செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (18:29 IST)

பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி

பாஜக பிரமுகர் கல்யாண ராமனின் ஜாமின் மனு தள்ளுபடி
சமூக வலைதளங்களில் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால் பாஜக பிரமுகர் கல்யாணராமன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கல்யாணராமன் சார்பில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கல்யாணராமன் ஜாமீன் மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.