புதிய குடியரசு தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
குடியரசு தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் புதிய குடியரசு தலைவர் யார் என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 11 மணிக்கு தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
முன்னனி நிலவரங்கள் அவ்வப்போது வெளிவந்தாலும், மாலை 4 மணிக்கு இறுதி முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவு திரெளபதி முர்மு அவர்களுக்கு இருந்தது என்பதால் அவர் இந்த தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது