திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (10:45 IST)

ஜனாதிபதி பதவியேற்கும்போது வேலுநாச்சியாரை குறிப்பிட்ட திரெளபதி முர்மு!

murmu
ஜனாதிபதி பதவியேற்கும்போது வேலுநாச்சியாரை குறிப்பிட்ட திரெளபதி முர்மு!
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரது பதவி ஏற்பு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த நிலையில் பதவி ஏற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது 
 
வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர் என்று திரௌபதி குறிப்பிட்டார். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள் என்றும் குடியரசு தலைவராக இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் திரெளபதி முர்மு தெரிவித்தார்
 
மேலும் 75வது சுதந்திர தினத்தில் குடியரசு தலைவராக பொறுப்பேற்ற தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் புனித நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குகின்றேன் என்றும் தொடர்ந்து பேசினார்