1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (14:56 IST)

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்ன ஆச்சு? ஜனாதிபதி தேர்தல் கூறும் பாடம்!

opposite
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் சேர்ந்து பாஜகவை வீழ்த்தும் என்று கூறப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளது எதிர்கட்சியின் ஒற்றுமையை கேள்விக்குறியாகியுள்ளது 
 
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் சுமார் 120 பேர் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்க முடியாது என வெளிப்படையாகவே மம்தா பானர்ஜி கூறியிருப்பது எதிர் கட்சிகளின் ஒற்றுமையை மீண்டும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதே நிலை 2024 வரை தொடர்ந்து இருந்தால் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் மற்றபடி