குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்
நாடு முழுவதும் குடியரசு தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அடுத்த கட்டமாக குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது
இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் என்பவரும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்கரெட் ஆல்வா என்பவரும் போட்டியிடுகின்றனர்
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது முதல்கட்டமாக எதிர் கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் ராகுல்காந்தி சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜகதீப் தன்கர் தனது வேட்புமனுவை நேற்றே தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது