1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (13:57 IST)

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: டாலர் மதிப்பு உச்சம்!

rupee
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமெரிக்க டாலர் கடந்த சில நாட்களாக உச்சத்தில் சென்று இருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு இன்று உச்சத்தை எட்டியதால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் சரிந்தது
 
இன்று ஒரே நாளில் 42 காசுகள் சரிந்து என்பது ரூபாய் முப்பத்தி எட்டு காசுகள் என ரூபாய் மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது