வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 21 செப்டம்பர் 2022 (19:49 IST)

உக்ரைன் போர் குறித்து பிரதமர் - புதின் இடையேனான பேச்சை வரவேற்ற அமெரிக்கா!

ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா நாட்டு வரவேற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நடந்த  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் இடையே,  உக்ரைன் மீதான போர் பற்றி,  முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும்,  போருக்கான நேரம் இதுவல்ல என்று கூறியிருந்தார்.

மேலும், தொலைபேசி வாயிலாகவும் பிரதமர் கூறியிருந்தார். இதுகுறித்துப் பரவலாக செய்திகளும் வெளியாகின.

இந்த  நிலையில்,  பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்ட ரஷிய அதிபர்,  உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இந்த  நிலையில்,  ரஷ்ய அதிபருடன் பிரதமர் பேசியதை, அதிபர் பைடன் தலைமையிலான  அமெரிக்க அரசு  வரவேற்றுள்ளது.