1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (16:10 IST)

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 வருடம் சிறைத்தண்டனை: அரசு அறிவிப்பு!

10 rupees coin
தமிழகத்தின் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க பொதுமக்கள் பலர் மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சில அரசு அலுவலகங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படவில்லை
 
இந்த நிலையில் பத்து ரூபாய் நாணயங்களை யாராவது வாங்க மறுத்தால் அல்லது செல்லாது என்று கூறினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது