இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயரும்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டு இரண்டு மடங்கு உயரும் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அமெரிக்காவில் சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழிலதிபர்கள் அதிகம் மாறி வருவதாகவும் அதனால் லட்சாதிபதிகள் அதிகமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு 8 லட்சம் லட்சாதிபதிகள் இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு அது 16 லட்சம் என இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் கருத்து தெரிவித்துள்ளன. தற்போது உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய தொழிலதிபர் அதானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது