1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:40 IST)

இன்னும் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்; டெல்லி மருத்துவர்கள் எச்சரிக்கை..!

இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும் என டெல்லி மருத்துவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நாளைக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. 
 
இந்த நிலையில் மருத்துவமனை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவு டெல்லியில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 டெல்லியில் இன்னும் ஒருசில வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தோடும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக சரியும் என்றும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இருப்பினும் மூத்த குடிமக்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசங்களை அணிய வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva