ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (10:00 IST)

7000ல் இருந்து 10000: உச்சத்திற்கு செல்லும் இந்திய கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் நேற்று 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 10,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10158 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 44 ஆயிரத்து 998 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நேற்று 7000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 3000 பேர் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனை அடுத்து நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.
 
 
Edited by Mahendran