ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:44 IST)

“ஹர்ஷல் செய்தது சரிதான்… மற்றவர்களும் இதை செய்யவேண்டும்”.. மன்கட் ரன் அவுட் பற்றி அஸ்வின்!

கிரிக்கெட் உலகின் சர்ச்சைகளில் ஒன்றாக மன்கட்டிங் விக்கெட் முறை இருந்து வருகிறது. 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் வினோ மன்கட் பந்துவீசும்போது எதிர்முணையில் நின்ற ஆஸி பேட்ஸ்மேன் பில்லி ப்ரௌன் கிரீஸை விட்டு செல்ல ஸ்டம்ப்பை தட்டி அவுட்டாக்கினார். அப்பொது இந்த முறையில் அவுட் ஆக்குவது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை கெடுப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.  அன்று முதல் இதுபோல விக்கெட் எடுப்பது மன்கட்டிங் என சொல்லப்படுகிறது.  ஆனால் அவ்வப்போது யாராவது இதுபோல மன்கட்டிங் செய்ய அது சர்ச்சையாகி வந்தன.  இந்நிலையில் கடந்த ஆண்டு  செப்டம்பர் முதல் மன்கட்டிங் முறையில் விக்கெட் எடுப்பது ரன் அவுட் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஹர்ஷல் படேல் மன்கட் செய்ய முயன்றார். இந்த போட்டியின் கடைசி பந்தை ஹர்ஷல் படேல் வீச வந்த போது எதிர்முனையில் நின்ற ரவி பிஷ்னாய் கிரீஸை விட்டு வெளியேறினார். அப்போது ஹர்ஷல் படேல் மன்கட் முறையில் அவுட் ஆக்க ஸ்டம்பை தட்டினார். ஆனால் அவர் கையில் ஸ்டம்ப்பில் படவில்லை. அதை மட்டும் அவர் சரியாக செய்திருந்தால், போட்டி டிராவில் முடிந்திருக்கும். அதன் பின்னர் சூப்பர் ஓவர் மூலமாக முடிவு தெரிந்திருக்கும். அவர் செய்த தவறால் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஆனால் ஹர்ஷல் படேலின் செயலுக்கு விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்ஷல் படேல் செய்தது சரிதான் எனக் கூறியுள்ளார். அதில் “இதில் என்ன தவறு இருக்கிறது.  கடைசி பந்துக்கு ஒரு ரன் தேவை என்றால் கண்டிப்பாக ஆடாமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன், கிரீஸை விட்டு வெளியேறுவார். நானாக இருந்தால் ஒவ்வொரு பந்தும் நிறுத்தி ரன் அவுட் செய்ய முயல்வேன். எல்லா பவுலர்களும் இதை செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார்.