தொடர்புடைய செய்திகள்
- மேற்குவங்க மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு.! நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு.!!
- கோரிக்கைகளை அரசு ஏற்காததால் நாளை வேலைநிறுத்தம்: ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
- தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
- அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு.. சிபிஐ எதிர்ப்பு
- உச்சநீதிமன்றம் கண்டிப்பு.! தெலங்கானா முதல்வர் நிபந்தனையற்ற வருத்தம்.!!
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் வேலை நிறுத்தம் தொடரும்: மேற்குவங்க மாநில டாக்டர்கள் உறுதி..!
போராட்டம் நடத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும் என்று மேற்குவங்க மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
