1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:55 IST)

வேகமாக சென்ற லாரி.. திடீரென தரைமட்டமான பாலம்! - அதிர்ச்சி வீடியோ!

Bridge Collapse

யாகி புயலால் சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில் பாலம் ஒன்று லாரி சென்றுக் கொண்டிருக்கும்போதே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாகி புயலாக வலுவடைந்த நிலையில் வடமேற்கு பிலிப்பைன்ஸ், சீனாவின் தென்கிழக்கு பகுதி மற்றும் வியட்நாம் உள்ளிட்ட மூன்று நாடுகளின் பகுதிகளை புயல் வலுவாக தாக்கியது. 

 

இதில் வியட்நாமில் மட்டும் 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யாகி புயலால் வியட்நாமின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாகனங்கள் செல்லும் பாலம் ஒன்று நொடிப்பொழுதில் தரைமட்டமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு லாரியும் அதன் பின்னால் இரு பைக்கும் சென்றுக் கொண்டிருக்கிறது. லாரி பாலத்தின் முகப்பிற்குள் நுழையும் சமயம் நொடிப்பொழுதில் பாலம் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் லாரியும் பாலத்தோடே ஆற்று வெள்ளத்தில் விழுந்து மூழ்கியது.

 

பின்னால் சென்ற இரு சக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K