சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தல் - துரோகத்தால் ஆதித்யா தாக்ரே வேதனை!
மகராஷ்டிரா சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.
அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காணோளியில் பங்கேற்கிறார்.
மகராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 40 பேர் அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். இவர்களில் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களை கடத்தி வைத்துள்ளனர். அவர்கள் திரும்ப வர வேண்டும். மற்றொடு பிரிவினர் அறத்திற்கு மாறாக உள்ளனர் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் எங்களிடம் கூறினர். ஆனால், சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.