செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (16:46 IST)

டிஎன்ஏ சோதனை: தோண்டி எடுக்கப்படும் புதைக்கப்பட்ட உடல்!

கடந்த ஜூன் 29 ஆம் தேதி குப்வாராவில் நடந்த சண்டையின் போது தீவிரவாதி ஒருவர் கூட்டுக்கொள்ளப்பட்டார். அவரது உடலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத காரணத்தால், பாதுகாப்பு படையினர் அப்படியே புதைத்துவிட்டனர். 
ஸ்ரீநகரின் பர்சுல்லா பகுதியை சேர்ந்த கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்கள் மகனின் புகைப்படத்தை அடையாளம் கண்டுகொண்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதி எங்கள் மகன் என்று தெரிவித்தனர்.
 
மேலும்,  இறந்த தீவிரவாதியின் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவரது தந்தை வேண்டுகோள் விடுத்தார். இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு பெறவே ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. 
 
இந்நிலையில், கொல்லப்பட்ட தீவிரவாதியின் டிஎன்ஏ அவரது தந்தையோடு பொருந்தியுள்ளதாக சான்று அறிக்கை உறுதியாகியுள்ளது. ஆனால், உடலை தந்தையிடம் ஒப்படைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். 
 
அதன் பின்னர் புதைத்த உடலை தோண்டியெடுத்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.