ஊடகங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல்; கதை கட்டும் பொன்.ராதாகிருஷ்ணன்

Pon Radhakrishnan
Last Updated: புதன், 20 ஜூன் 2018 (14:50 IST)
தீவிரவாதிகள் ஊடகங்களிலும் ஊடுருவி இருக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
அரசு எதிராக மக்கள் போராட்டத்தில் களமிறங்கினால் தீவிராதகள், பயங்கரவாதிகளின் சதி செயல் என மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து கூறி வருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வப்போது தமிழகத்தில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என கூறி வருகிறார்.
 
இந்நிலையில் இன்று அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
 
தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். மாவோஸ்ட்டுகள், நச்சலைட்டுகள், தமிழ் பெயரைச் சொல்லி பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பல்வேறு அமைப்புகளுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.
 
அவர்கள் ஊடகங்களிலும் ஊடுருவி இருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் பெரிய அழிவினை சந்திக்க நேரிடும். பயங்கரவாதிகளை ஒடுக்க அரசாங்கம் சர்வாதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :