செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (17:21 IST)

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல்துறையில் புகார்

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வந்தார்.  இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் இணக்கம் இல்லை என சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

இதையடுத்தும், இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ இடையேயான சமரச சமய பேச்சு தோல்வி அடைந்ததால் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று  பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார்  அளித்துள்ளார்.

அதில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.