தொடர்புடைய செய்திகள்
- ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டம்! – பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயக்கம்!
- விமான நிலையத்தில் திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா நடத்தும் முன்னாள் முதல்வர்!
- திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை உயர்வு!
- எண்ண முடியாமல் சோர்ந்து போன ஊழியர்கள்: திருப்பதியை மிஞ்சிய உண்டியல் வசூல்!
- வீடு தேடி வருகிறது கோவில் பிரசாதங்கள்: அமைச்சர் தகவல்!
திருப்பதியில் தெப்ப உற்சவம் தொடக்கம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருப்பதியில் இன்று முதல் தெப்ப உற்சவம் தொடங்க இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
திருப்பதியில் உள்ள புஷ்கரணி என்ற தெப்பகுளத்தில் இன்று முதல் மார்ச் 28ஆம் தேதி வரை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவம் நடைபெறும் போது ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்தியாவில் தற்போது இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக உருவாகி உள்ள காரணத்தினால் மருத்துவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து திருப்பதியில் இன்று முதல் நடைபெறும் தெப்ப உற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியதாவது இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை திருப்பதி சுவாமி புஷ்கரணி தெப்பகுளத்தில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பு திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
