புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (14:01 IST)

விமான நிலையத்தில் திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா நடத்தும் முன்னாள் முதல்வர்!

திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா நடத்தும் முன்னாள் முதல்வர்!
முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு ரெட்டி திடீரென விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருப்பதி விமான நிலையத்திற்கு இன்று சென்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திடீரென விமான நிலையத்தில் அவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துகிறார்
 
ஆந்திராவில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ளதாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர்களை மனுக்களை வாபஸ் பெறுமாறு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தொல்லை கொடுப்பதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்திருந்தார் 
 
இதுகுறித்து திருப்பதி மற்றும் சித்தூரில் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனையடுத்து போலீசார் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விமான நிலையத்திலேயே தரையில் உட்கார்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது