வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (08:20 IST)

”சுவாமியே சரணம் ஐயப்பா” விண்ணை முட்டும் கோஷத்துடன் மகரஜோதி தரிசனம்!

இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெறும் நிலையில் அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதம மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு, இருமுடி கட்டி சென்று ஐயப்ப தரிசனம் பெறுவது வழக்கம்.

மகரவிளக்கு பூஜையன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். மேலும் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மூன்று முறை காட்சியளிப்பார். அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடாரம் அமைத்து காத்திருக்கின்றனர்.

இன்று காலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு ஆபரண அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பொன்னம்பல மேட்டில் 3 முறை மகரஜோதியாக ஐயப்பன் காட்சியளித்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக “சுவாமியே சரணம் ஐயப்பா” என்று ஐயப்பனை துதித்தனர்.

இந்த ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் இதுவரை சபரிமலைக்கு ரூ.310.40 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

Edit by Prasanth.K