வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:54 IST)

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

sabarimala
சபரிமலையில் நாளை மகர விளக்கு தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார் என்பதால் அந்த ஜோதியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களை தவிர மற்றவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாஅதை வழியாக ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பாதுகாப்பிற்காக சுமார் 3000 போலீசார் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva