வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (13:00 IST)

சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

sabarimala
சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. 
 
குறிப்பாக சபரிமலையில் ஜோதி தெரியும் நாள் நெருங்க நெருங்க பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. 
 
இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த முருகன் மற்றும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கன்னியப்பன் ஆகிய இருவரும் சபரிமலைக்கு சென்று இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். சபரிமலையில் இரண்டு தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva