1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Delta Plus Corona for 56 people

56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரொனா

கர்ப்பிணிகள் தடுப்பூசி
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போடலாம் என மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதில். கோவின் செயலியில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசில் மையத்திற்கு நேரில் சென்றோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  இத்தனை நாட்களாகப் கர்ப்பிணிப் பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது இந்தியாவில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரொனாவால் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
உலக பட்டயகணக்காளர் தினத்தினை கெளரவித்த கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம்