டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு!
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு!
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு பெறுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜக்மோகன் சிங் என்பவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் அவர்கள் வரும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் எனவே விருப்ப ஓய்வு பெற இருப்பதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த விருப்ப ஓய்வை ஏற்றுக்கொண்டால் அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தலைமை ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கப் படுவார் என்றும் அதன்பின்னர் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது