1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (15:01 IST)

டெல்லி செங்கோட்டை தீவிரவாத தாக்குதல்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

hang
டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2000ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் அந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் 
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
 கடந்த 2011ஆம் ஆண்டே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இந்த தூக்கு தண்டனையை மறு சீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் முகமது ஆரிப் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மறுசீராய்வு மனு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த மறுசீராய்வு அமர்விலும் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் விரைவில் தூக்கிலிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran