1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (12:10 IST)

டெல்லிக்கு அவசர பயணமாக சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி: திமுக காரணமா?

Governor
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிஅவசரப் பயணமாக டெல்லி சென்று உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என திமுக முடிவு செய்து, கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது 
 
டிஆர் பாலு தலைமையிலான குழு இந்த கையெழுத்து வேட்டையை நடத்தி வருகிறார்கள் என்பதும் விரைவில் இந்த மனுவை ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்ளார். அவர் இரண்டு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது 
 
ஏற்கனவே கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் எதற்காக டெல்லி சென்றார் என்ற பரபரப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran