ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (13:57 IST)

இந்திய நாடா இது? JNU மாணவர்கள் தாக்குதல் விவகாரத்தில் தீபிகா காட்டம்!!

ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு கடுமையான கோபம் உள்ளது என தீபிகா மனம் வருந்தியுள்ளார். 
 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தில் நேற்று முன் தினம் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுக்கூட்டத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சராமாரியாக தாக்கியது. 
 
இதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியேவும் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் வெளியே நடைபெறும் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். 
தீபிகாவின் இந்த செயலுக்கு வரவேற்புகளும் கண்டனங்களும் குவிந்துள்ளது. இன்னும் இரு தினகங்களில் வெளியாகும் சபாக் என்னும் தனது படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் இப்படி செய்துள்ளார் என விமர்சித்து #boycottchhapaak என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். தீபாவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #IstandwithDeepika என்றும்  ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
இந்நிலையில் தீபிகா இது குறித்து மனதிறந்துள்ளார். அவர் கூறியதாவது, இது போன்று படத்திற்கு எதிராக குரல் கொடுப்பதை நான் பத்மாவத் வெளியீட்டின் போதே பார்த்துவிட்டேன். ஆனால், இது எனக்கு வலியை கொடுக்கிறது. நான் கலக்கத்திலும் சோகத்திலும் இருக்கிறேன். 
 
ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் எனக்கு கடுமையான கோபம் உள்ளது. இன்னமும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது மோசமானது. இது நம் நாட்டின் அடிப்படையே இல்லை என பேசியுள்ளார்.