புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:58 IST)

வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்த ரன்வீர் - தீபிகா தம்பதி - ஸ்டார் நடிகர்களுக்கே இந்த நிலமையா?

பாலிவுட்டின் அழகிய தம்பதிகளான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் தங்களின் படங்களின் மூலம் ரசிகர்களிடம் அதீத அன்பைப் பெற்றவர்கள். திரையில் கெமிஸ்ட்ரி நிறையப் பெற்ற இந்த ஜோடிக்கு அதுவே அவர்களின் காதல் திருமணத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்து. 
 
நட்சத்திர நடிகர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதில் அவரது ரசிகரக்ள் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த வகையில் தற்போது ரன்வீர் சிங்  சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் பிரபல அப்பார்ட்மெண்டில் 7.25 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த விஷயம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 
மும்பையில் பிரபலமான பிரபாதேவி அபார்ட்மெண்டில் நடிகர் ரன்வீர் சிங் கடந்த 2010 ஆம் ஆண்டில் சுமார் 16 கோடிக்கு வாங்கி அங்கு பேச்சுலராக தங்கியிருந்தார். பின்னர் தீபிகா படுகொலை காதலித்த பிறகு தீபிகா இருக்கும் அதே அப்பார்ட்மெண்டிற்கு இடம்பெயர்ந்த ரன்வீர் அங்குள்ள அப்பார்ட்மெண்ட்தில் மூன்று வருடத்திற்கு ரூ. 7.97 லட்சம் வாடகையாக எடுத்து ஒரு பிளாட்டில் தங்கி இருந்தாராம்.  காதலிக்க ஆரம்பித்து விட்டாலே லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரும் பிரபலங்களுக்கு மத்தியில் இந்த ஜோடி புறாவின் டீசண்டான காதலை  அனைவரும் பாராட்டி வருகின்றனர்.