1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (17:18 IST)

ஜே.என்.யூ தாக்குதல்: வாட்ஸ் ஆப்பில் முன்கூட்டியே திட்டம்?

வாட்ஸ் ஆப்பில் வலம்வந்த குறுஞ்செய்தி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள்  பெரிய வன்முறையை எற்படுத்தும்  வகையில் அமைந்திருக்கின்றன என தெரியவந்துள்ளது. 
 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை தாக்கியுள்ளனர். 
 
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பல பல்கலைகழக மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
தேச விரோதிகளை வீழ்த்த வேண்டும் என்று வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த குறுஞ்செய்தி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் பெரிய வன்முறையை எற்படுத்தும்  வகையில் அமைந்திருக்கின்றன என தெரியவந்துள்ளது.