வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (13:29 IST)

ஜேஎன்யூ மாணவர்களை நாங்கதான் அடிச்சோம்! – ஒத்துக்கொண்ட பிங்கி!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என இந்து அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தில் நேற்று முன் தினம் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுக்கூட்டத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சராமாரியாக தாக்கியது. இதனால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் பல்கலைகழகத்தில் தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பின் தலைவர் பிங்க்கி சவுத்ரி கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை ஜே.என்.யூவில் மேற்கொண்டதால் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.