புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:50 IST)

உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ்… அதிர்ச்சியான மனைவி!

பீகாரில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டவர் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறி இறப்புச் சான்றிதழ் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிகாரின் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து பாசிட்டிவ் என வந்துள்ளது. அதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா வார்டு என்பதால் அவரை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். மின்மயானத்துக்குச் சென்ற சுனுகுமாரின் மனைவி கவிதா தேவி, கடைசியாக தனது கணவரின் முகத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது முகத்தைப் பார்க்கவே ‘அது தன் கணவர் இல்லை’ என சொல்லியுள்ளார். அதையடுத்து நடந்த விசாரணையில் சுனுகுமார் ‘மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பதும் இறந்தது ராஜ்குமார் பகத் என்றும் தெரியவந்துள்ளது. இது பீகாரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவே குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.