வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (23:45 IST)

ரயிலில் கேட்பாரற்றுக் கிடைந்த ரூ.1 கோடி பணம்....

டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் கேட்பாறற்ற நிலையில் இருந்ததுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து பீகார் மாநிலத்தை நோக்கி ஒரு சிறப்பு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் யாருமே கேட்பாரற்ற நிலையில்  பணம் குவியல் கிடைப்பதைப் பார்த்த  ரயிலே ஊழியர் ஒருவர் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

அப்போது விரைந்து வந்த அதிகாரிகள் அதைத் திறந்து பார்த்தனர். உள்ளே பணம் ரூ.1 கோடியே 40 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இப்பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.