1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (18:46 IST)

பள்ளி மைதானத்தில் வெடிகுண்டு வெடித்து..சிறுவன் பலி

பீகார் மாநிலம் ககாரியாவில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் வெடிகுண்டு வெடித்தது இத்ல் 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகார் மாநிலம் ககாரியாவில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள மைதானத்தில் 9 வயது சிறுவன் முகமது குர்பான்  விளையாடிக் கொண்டிருந்தாம். அப்போது, கீழே உருண்டை வடிவத்தில் கிடைந்ததை 
 
பந்து என எடுத்து விளையாடியபோது, வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. இதில், சிறுவன் முகமது படுகாயமடைந்தான். அவனை மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 
மேலும், அவனுடன் விளையாடி 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.