1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (19:04 IST)

மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்: தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு!

தமிழக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சிகளின் எம்பிக்களின் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் எம்பிக்கள் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களிலும் இன்று இந்த மசோதா நிறைவேறி உள்ளது.அணை பாதுகாப்பு மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது