1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 நவம்பர் 2021 (07:23 IST)

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் கூட்டம் இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் சில முக்கிய விவகாரங்களை கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருக்கின்றது இன்றைய முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு சமையல் கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை என்று எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதை அடுத்து பாராளுமன்றத்தில் இன்று பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது