1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 நவம்பர் 2021 (12:25 IST)

வேளாண் சட்டங்கள் ரத்து; மக்களவையில் நிறைவேறியது மசோதா!

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திரமோடி கடந்த 19ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முதலாவதாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.