டெல்லி எல்லையில் பிரமாண்ட கூட்டம்: விவசாய சங்கங்கள்
ஏற்கெனவே திட்டமிட்டபடி டெல்லியின் எல்லையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி வரும் 29 ஆம் தேதி டெல்லி எல்லையில் பிரமாண்ட கூட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஆம் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படும் அதே நாளில், ஏற்கெனவே திட்டமிட்டபடி டெல்லியின் எல்லையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.