புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (09:49 IST)

ஃபானி புயல்: முதல்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடி!

நேற்று காலை ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்தபோது அந்த மாநிலத்தின் பெரும் பகுதியை பயங்கர சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. தலைநகர் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு கீழே விழுந்துள்ளது. மேலும் மின்கம்பங்கள் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது
 
ஃபானி புயலுக்கு இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிற்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் மீட்புப்பணியினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஃபானி புயல் நிவாரணத்தின் முதல் கட்டமாக அம்மாநிலத்துக்கு 1000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும்  புயல் குறித்த தகவல்களை அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் அறிந்து வருதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுடன் மத்திய அரசும் நாட்டு மக்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 
 
மேலும் புயல் பாதித்த ஒடிஷா மக்களுக்கு நாட்டு மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நாட்டு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே புயல் பாதித்த ஒடிஷா மாநிலத்திற்கு நிதியுதவும் பொருளுதவியும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது