திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (14:20 IST)

ரூ.521 கோடி சம்பளம் வாங்கிய சூப்பர் ஹீரோ: யார் தெரியுமா?

பிரபல ஹாலிவுட் நடிகர் தனது சமீபத்தைய படத்திற்கு ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில் அயன் மேன் படங்கள் பிரபலமானவை. இது வரை அயன் மேன் 3 பாகங்களாக வெளியாகியுள்ளது. அதேபோல் அயன் மேனுக்கு அவெஞ்சர்ஸ் படத்தில் முக்கிய பங்கும் உள்ளது. 
 
இப்படி அயன் மேனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான அயன் மேன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டாலராக உயர்த்தினார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.70 கோடி.
அவெஞ்சர்ஸ் படங்களில் சம்பளம் போக லாபத்தில் 2.5% கூடுதல் தொகையும் இவருக்கு கிடைக்கும்படி ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் இவருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டாலர் சம்பளமாக கிடைத்துள்ளதா. அதாவது இந்திய மதிப்பில் ரூ.521 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம்.