1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cyclone Ditwah: Slow Movement and Expected Weakening

வட தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்: 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

புயல்
இலங்கை கடல் பகுதியில் உருவான 'டிட்வா' புயல், தற்போது வட தமிழக பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
 
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, புயல் தற்போது சென்னையிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் மணிக்கு 7 கி.மீ. ஆகும். மேலும், காரைக்காலில் இருந்து 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
 
நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
'டிட்வா' புயல் சென்னையை நெருங்கும் சமயத்தில், அதன் தீவிரம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும், கடலோர பகுதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!