ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (23:19 IST)

வந்தேபாரத் ரயிலின் மீது மீண்டும் பசுமாடுகள் மோதி விபத்து!!

vandebharath
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் நேற்று மாடுகளின்  மீது விபத்துக்குள்ளான  நிலையில் மீண்டும் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குஜராத் மா நிலம் காந்தி நகரில் இருந்து மஜாராஷ்டிரா தலை நகர் மும்பை   நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத்.  வழிப்பாதையில் குறுக்கே எருமைமாடுகள் புகுந்ததால், விபத்தில் சிக்கி முன் பகுதி  சேதமடைந்தது. இந்த விபத்தில், 6 எருமைமாடுகள் பலியாகின.

இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வந்தே பாரத் ரயிலின் மீது பசுமாடு மோதியதில் முன்பகுதிகள் சேதமடைந்துள்ளது.

Edited by Sinoj