வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (11:16 IST)

இந்தியில் ரிமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ஹிட் படம்!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் நடித்திருந்த திரிஷா, விஜய் சேதுபதி மற்றும் அவர்களின் இளைய கதாபாத்திரங்களாக வரும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷான் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் தமிழில் இயக்கிய பிரேம் குமாரே இயக்கினார். ஆனால் இரண்டு மொழிகளிலும் தமிழில் பெற்ற வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரபல தயாரிப்பாளர் அஜக் கபூர் இதன் உரிமையை வாங்கி ரீமேக் செய்ய உள்ளார்.

விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.